ஜெயலலிதா குரலில் பேசி கலக்கிய கலக்கப்போவது யாரு நவீன் கைது !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களை பேசி அசத்தி  மிமிக்ரி செய்து பிரபலமானவர் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). 

இவரின் பேச்சு திறமையால் ரசிகர்களை கவர்ந்த இவர் அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.இவரின் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தபோது காவல் துறை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தது. இவர் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்வதாக இருந்த போது.

திவ்யா என்ற பெண்  நவீன் தன்னை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும் இப்பொழுது இவர் இரண்டாம் திருமணம் செய்யஉள்ளதாக  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தார். 

திவ்யா அளித்த ஆதாரங்களை மையமாக கொண்டு காவல் துறை நவீன் மீது வழக்கு பதிவு செய்து நவீனின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த ரிசார்டுக்கு உடனே கிளம்பிச் சென்றனர். திருமணத்தை நிறுத்திவிட்டு நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

முதல் மனைவி இருக்கும்போதே நவீன் 2வது திருமணம் செய்ய முயன்று போலீசில் சிக்கியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *