முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - மூன்றாவது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

Tags : MLAS DISQUALIFICATION CASE, SC, Category : TAMIL NEWS,

புதுடெல்லி:
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதேசமயம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்க்ல செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்யநாராயணாவை பரிந்துரை செய்தது.
மேலும், 3-வது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. #MLAsDisqualificationCase #SCJudge


Share :

Related Posts