மின்னல் போல வந்த வேகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா!

சென்னை:
பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்திருந்த ஓவியா போட்டியாளர்களிடம்
இருந்து விடைபெற்று வெளியேறினார். ‘பிக்
பாஸ் தமிழ் – சீசன் 2’ பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியுள்ளது.
கடந்த சீசனை போலவே இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து
வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் மொத்தம் 16 போட்டியாளர்கள்
நுழைந்துள்ளனர். இவர்களுடன் கடந்த பிக் பாஸ் சீசனில் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை
பெற்ற ஓவியாவும் விருந்தினராக உள்ளே அனுப்பப்பட்டார். ஆனால்,
பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இது குறித்த உண்மையை சொல்ல வேண்டாம் என்று கமல்ஹாசன் ஓவியாவிடம்
கேட்டுக் கொண்டார். அவர்களுடன் 100 நாட்களும் பயணிக்க உள்ள சக போட்டியாளர் போலவே இருக்குமாறு
கமல்ஹாசன் ஓவியாவை அறிவுறுத்தி இருந்தார். அதாவது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு
சிறு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவே இந்த ஏற்பாடு. அது நன்கு ஒர்க் அவுட் ஆகவும்
செய்தது. ஓவியா
பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதை போட்டியாளர்கள் சிலர் கண் கொட்டாமல் ஆச்சர்யத்துடன்
பார்த்தனர். ஓவியாவும் அவர்களிடம் 100 நாட்களும் பிக்
பாஸ் வீட்டில் தங்க போவதாக பொய் கூறினார். இந்நிலையில், மிச்சமிருந்த பிக் பாஸ்
தொடக்க நாள் நிகழ்வுகள் மற்றும் உள்ளடங்கிய எபிசோட் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதன்படி,
தொடக்க நாளிலேயே ஓவியாவை வீட்டில் இருந்து வெளியேறுமாறு பிக் பாஸ் அழைத்தார்.

இதைத்
தொடர்ந்து, விருந்தினராக மட்டுமே இம்முறை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதை
வெளிப்படுத்திய ஓவியா போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறி விட்டு வெளியேறினார்.
கடைசியாக அவர் அடித்த ‘பன்ச்’சை கேட்டு போட்டியாளர்கள் சற்று ஜெர்க் ஆகியிருக்க
கூடும். “உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு!” என்று ஓவியா சிரித்துக் கொண்டே
சொல்லிவிட்டு, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். Oviya
left the big bass home at the speed of lightning


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *