தயாரிப்பாளரின் மனைவி என்னை அவர் கணவருக்கு விருந்தாக்க நினைத்தார்: பெண் பாடலாசிரியர் சர்ச்சை

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக(Casting Couch) இதுவரை பலபேர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அது இதுவரை குறைந்தபாடில்லை. இந்நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, பெல்லி சூப்புலு ஆகிய படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய சிரேஷ்டா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “நடிகைகள் மட்டுமல்ல, வாய்ப்புக்காக மற்ற பணி செய்பவர்களை கூட படுக்கைக்கு அழைப்பது நடக்கத்தான் செய்கிறது.

ஒரு பிரபல தயாரிப்பாளரின் மனைவி என்னிடம் வந்து அவரின் கணவர் ஆசைக்கு இணங்கும்படி கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “”இண்டஸ்ட்ரியில் இருக்கும் பலர் எனக்கு அட்வைஸ் என்ன தெரியுமா, ‘வெறும் எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டது உனக்கென ஒரு இடத்தை டோலிவுட்டில் பெற முடியாது’ என்பதுதான்” என சிரேஷ்டா தெரிவித்துள்ளார்.

ஆணாதிக்கம் உள்ள சினிமா துறையில், சாதிக்க வேண்டும் என பல இன்னல்களை தாண்டி வரும் பெண்களுக்கு இப்படி நடக்கும் கொடுமை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *