பிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசன் 2 நிகழ்ச்சியை எதிர்பார்த்து பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே வேளையில் இதில் கலந்துகொள்ளப்போவது யார் என்ற ஆர்வமும் உள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரி பிரியா என்ற பெண் நிகழ்ச்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி மேற்கத்திய பாணியை கொண்டது. இது தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கு தேவையில்லை. எங்கள் வீட்டு பிள்ளைகள் கூட அதை பார்த்து கெட்டு விடுவார்களோ என பயம் இருக்கிறது. கமல்ஹாசன் சினிமா படத்தில் நடிக்கிறார். நிகழ்ச்சியில் வருகிறார்.

அரசியலிலும் இருக்கிறார். இதனால் மக்கள் இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் உள்ளனர். இது முற்றிலுமாக மாற வேண்டும். விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவோ இருக்கிறது. அதெல்லாவற்றையும் காட்டுங்களேன். விவசாயிகளின் கஷ்டத்தை இளம் தலைமுறையினருக்கு எடுத்து சொல்லுங்களேன்.

ஓவியாவுக்கு ஆர்மி என ஆரம்பித்தார்கள். ஆர்மியில் உள்ள யாரையாவது நாம் ரியல் லைஃப் ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளோமா?இதனால் அவருக்கு சம்பளம் கூடியதே தவிர? மக்களுக்கு அவர் என்ன செய்தார் என பல கேள்விகளை முன்னெடுத்து வைத்துள்ளார்.

பிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய ராஜேஸ்வரி பிரியா

https://www.youtube.com/watch?v=wFzIauv25pU

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*