கேம்ப் என கூறி விட்டு பங்களா வீட்டுக்கு வா, 1 மணி நேரத்தில் அனுப்பி வைத்து விடுவார்கள்

விபசார கும்பலின் பிடியில் சிக்கி இருக்கும் தனது மகளை மீட்டு தரும்படி, கல்லூரி மாணவியின் தாயார் குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், எனது மகளை உறவினர்களே தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிட்டனர். எனது மகளின் செல்போனை பார்த்தபோது அதில் எனது மகள் வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள், போட்டோக்கள் இருந்தன.
இந்த காட்சிகளை பார்த்து நான் அதிர்ந்து போனேன். அதில் உள்ள போட்டோக்கள், உரையாடல்களை பார்த்த பின்னரே எனது மகளை ஒரு கும்பல் தவறான பாதைக்கு அழைத்து சென்று, சீரழித்து வருவது தெரிய வந்தது.
அவளை மூளை சலவை செய்து விட்டதால், சட்டப்படி மீட்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில்,என்.எஸ்.எஸ். கேம்ப் என கூறி விட்டு பங்களா வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள். 1 மணி நேரத்தில் உன்னை அனுப்பி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் உரையாடல்கள் உள்ளன.
பணத்துக்கு ஆசைப்பட்டு வரும் கல்லூரி மாணவிகளை, பண வசதி உள்ள வாலிபர்கள் சிலருடன் நெருக்கமாக பழக வைத்து, அதை போட்டோவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள்.இந்த கும்பலில் அரசியல்வாதிகள் சிலரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.