நடிகர் சிவகார்த்திகேயனை மனம் நெகிழ வைத்த ஒரு பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதிலும் அவரது அப்பா மீது அவருக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. தன்னுடைய வளர்ச்சியை பார்த்த அப்பா இல்லையே என பல மேடைகளில் சிவகார்த்திகேயன் வருத்தப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அவரது அப்பா போட்டைவை எடிட்டிங் செய்து ரசிகர்கள் ஒருவர் டுவிட்டரில் பதிவிட, அதைப்பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி சிவகார்த்திகேயன் அப்பாவை பெருமையாக பதிவு செய்துள்ளார். அவரின் அந்த பதிவை பார்த்து நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன் 15 ஆண்டுகளுக்கு பிறகும் பேசுகிறீர்கள் என்றால் அவரது பெருமையையும் உங்களது நல்ல மனதையும் காட்டுகிறது என பதில் டுவிட் செய்திருக்கிறார்.

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது. . living wit his memories every second. . I think I’m not lucky enough to live many years wit my role model & biggest inspiration. . Miss u pa. . . https://t. co/Jik5DJ4yQs— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 10, 2018


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *