விநாயகர் சதுர்த்திக்கு வரும் ‘சீமராஜா’!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’
திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றியை
தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் ‘சீமராஜா’ திரைப்படம்
உருவாகி வருகிறது. 24 ஏ. எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’சீமராஜா’ திரைப்படம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப். 13ம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#SeemaRajaUpdate
: We are nearing completion of our @Siva_Kartikeyan
in and as #SeemaRajaFinal
day shoot and #SeemaRajaFarewellDay
on 19th June,2018#SeemaRajaReleasingOnSep13th
#SeemaRajaFromVinayakarchathurthi
@ponramVVS
@Samanthaprabhu2
@KeerthyOfficial
@sooriofficial—
24AM STUDIOS® (@24AMSTUDIOS) June
15, 2018

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும்,
நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று
வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஜூன். 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த படத்தை தொடர்ந்து எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும்
ரொமாண்டிக்-காமெடி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *