கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


போலீஸ் பாதுகாப்புடன் உணவு விடுதிக்கு வந்த எஸ்.வி.சேகர்

சென்னை: போலீசாரால் தேடப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று படப்பை அருகே ஒரு உணவு விடுதியில் போலீஸ் பாதுகாப்புடன் சாப்பிட்டார்.
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்மீது தொடரப்பட்ட வழக்குகளில் கைது செய்யாமல் இருக்க நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து எஸ்.வி.சேகரை கைது செய்யாத தமிழக போலீசாருக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில், தாம்பரம் அருகே படப்பை அடுத்த கீழ் படப்பையில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். பின்னர் அவர் அங்கு உணவு சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியில் வந்த அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரால் தேடப்படும் ஒரு நபர், போலீஸ் பாதுகாப்புடனே பொது இடங்களுக்கு வந்து செல்வது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமாகவும், சாமானியர்களுக்கு ஒரு சட்டமாகவும் இருப்பதாக பேசிக்கொண்டனர்…

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *