தமிழிசையுடன் காரசார புதியதலைமுறை விவாதம்!

பிரபல தொலைக்காட்சி கோவையில் நடத்திய விவாத நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் தற்போது சமூக வலைதளத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.Tamilisai-720x450[1]

நிகழ்ச்சியில் பேசப்பட்ட விசயங்கள் சிலரின் வற்புறுத்தலின் பெயரில் நீக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறமிருக்க அப்படி எடிட் செய்யப்பட்டு வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்ற காரசார விவாத காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

குறிப்பாக பாஜக மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிக்கு இடையே நடந்த விவாத காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

அந்த காணொளியில் பாஜக தலைவர் தமிழிசைக்கு கேபி அவர்கள் பதில் சொல்லும் போது அரங்கத்தில் கை தட்டல்கள் பறக்கின்றது.

”உங்க பாஜக தான் ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து எழும்பு துண்டை வாங்கியுள்ளது” என கேபி அவர்கள் கூற . ”இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என தமிழிசை கூற . ”உங்க கட்சி சட்ட விரோதமாக வெளிநாட்டு நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலை வேதாந்த விடமிருந்து நன்கொடை வாங்கியது டெல்லி உயர் நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை கண்டித்துள்ளது” என கேபி கூற அரங்கத்தில் கை தட்டல் பறந்தது.

உடனே தமிழிசை பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகின்றார்கள் எனக் கூறினார்.

தமிழிசை கூறிய ஒவ்வொரு விசயத்திற்கும் கேபி பதில் கூற அரங்கத்தில் கை தட்டல் பறந்த வண்ணம் இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *