சென்னையில் ஓரின சேர்க்கைக்கு இளைஞர்களை அழைத்து நகை பறித்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 சென்னையில் வளசரவாக்கத்தில் வாட்ஸ் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி இளைஞர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.சுமேஷ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்களை கண்டுபிடித்து அவர்களின் வாட்ஸ் ஆப்புக்கு அவர்களை கவரும் விதமாக மெசேஜ் அனுப்புவார்கள். அந்த நபர்கள், ஓரின சேர்க்கைக்கு சம்மதம் தெரிவித்த பின்பு தனியார் ஹொட்டலில் அறை எடுப்பார்கள்.அனைத்தும் முடிந்த நிலையில் வந்த நபர் நகை அணிந்து இருந்தால் இறுதியில் கூல்டிரிங்சில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, அந்த நபர் மயங்கிய பிறகு அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்து கொண்டு சென்று விடுவார்கள்.இதில் நகைகள் அணிந்து வராத நபர்களை ஆரம்பத்திலேயே நிராகரித்து விடுவதாகவும் சுமேஷ் கூறினார். கைது செய்யப்பட்ட சுமேஷிடம் இருந்து 5பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவரிடம்இருந்து 5பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ள போலிசார் இதுபோல் வேறு எங்காவது குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் வாட்ஸ் ஆப் மூலம் ஓரின சேர்க்கை, நகை கொள்ளை


https://www.youtube.com/watch?v=3cS03sWNnww

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *