கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


திமுகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம் : டிடிவி தினகரன்

திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தற்கொலை செய்து கொள்வதுக்கு சமம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போதே ஆலையை மூடியிருக்கலாம். 13 பேரை கொலை செய்த பிறகு மூடுவது சரியில்லை. துப்பாக்கி சூடு நடத்த யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பேசிய அவர், காவிரி பிரச்னையாக ரஜினி போராட்டம் எதுவும் நடத்தவில்லை உச்சநீதிமன்றம் உத்தரவை மட்டுதான் தெரிவித்தார். இதற்காக காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்வது முறையல்ல. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யாரோ சொல்லிக்கொடுத்ததை ரஜினி தெரிவிக்கிறார். யாரோ அவரை தவறான வழியில் நடத்துக்கின்றனர்.
நீட் தேர்வு நகர் புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் பாஜக மதவாதக் கட்சியாவதால் அதனுடனும் கூட்டணி வைக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *