தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

போலீஸ் ட்ரெஸ் போட வெட்கப்படுகிறேன்.... சின்னத்திரை நடிகை நிலானி கைது

By Admin - June 21st, 2018

Tags : Actress nilani, Actress nilani arrest, Nilani, Nilani arrest, Serial actress nilani, Serial actress nilani arrest, Sterlite protest, Thoothukudi protest, Category : Tamil News,

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை உடை அணிந்து காவல்துறைக்கு எதிராக  கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அந்த வகையில், பிரபல சின்னத்திரை நடிகை நிலானி காவல்துறை உடை அணிந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்துக்கள் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது திட்டமிட்ட படுகொலை எனவும் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் இல்லையென்றால் இலங்கையில் நடைபெற்றது போல் நாளை தமிழகத்திலும் நடைபெறும் எனவும் பேசியிருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ரிஷி என்பவர் காவல்துறையிடம் அளித்த புகாரின்படி சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காவல்துறை உடை அணிந்து, போலீஸ் உடை அணியவே வெட்கப்படுகிறேன் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி இன்று கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலானியை காவல்துறையினர் சென்னை அழைத்து வர இருக்கின்றனர்

போலிஸ் வேடமிட்டு வீடியோ வெளியிட்ட நடிகை கைது! | Serial Actress Nilani arrested for Tuticorin Issue


https://www.youtube.com/watch?v=gd6NT9kRtO0

Related Posts

நிலானி மறுத்ததால் தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம்!

சென்னை: நிலானி போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து தீக்குளித்த இயக்குனர் லலித்குமார் உயிரிழந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை…

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை தொடங்கியது

சென்னை,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது, இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர்…

காந்தி தற்கொலைக்கு நான் காரணமா? நடிகை நிலானி பரபரப்பு பேட்டி !

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்று நடிகை நிலானி தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் மகாபாரதம், தென்றல்,…

மப்டி உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் போலீஸ், திட்டமிட்ட கொலை

தமிழ்நாட்டில் இன்று மிகக் கொடூரமான கருப்பு நாளாக நாளை வரலாற்றில் பதிவாகும் அளவிற்கு இன்றைக்கு தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அமைந்துள்ளது….

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட 2 துணை வட்டாட்சியர்கள் : நம்பிட்டோம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?