கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?


பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா!

கமல்ஹாசன் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகத்தில் ட்ரைலர் வெளிவந்துள்ளது, இந்த ட்ரைலர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதில் கமல்ஹாசன் ஒரு இடத்தில் ‘எந்த மதமாக இருந்தாலும் சரி, தேசதுரோகியாக இருப்பது தான் தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஸ்வரூபம்-2 ஹிந்தி ட்ரைலரில் ‘முஸ்லீமாக இருப்பது தவறில்லை, ஆனால், தேசதுரோகியாக இருப்பது தவறு’ என்பது போல் வசனங்கள் உள்ளது.

ஏன் ஹிந்தியில் இப்படி மாற்றினார்கள், அப்போது தமிழுக்காக கமல் தன் படைப்பை மாற்றுகின்றாரா? இல்லை தெரிந்தே இப்படி செய்கின்றாரா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *