தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்பு வாதம் நிறைவடைந்தது

By Admin - July 24th, 2018

Tags : 18_MLAs, DisqualifiedCase, Category : Tamil News,

சென்னைதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க.தமிழச்செல்வன் உள்ளிட்ட 18 பேர் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து அரசு கொறடா கொடுத்த புகாரை விசாரித்த சபாநாயகர் தனபால், இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 18 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று தலைமை நீதிபதியும், அந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு அளித்தனர்.இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி எம்.சத்தியநாராயணனை, 3-வது நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டது.அதன்படி, இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர், அரசு கொறடா உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.ஆர்யமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோரும், மனுதாரர்கள் 18 பேர் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும் ஆஜராகினர்.மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் தன் வாதத்தை முதலில் தொடங்கினார்.

அவர் வாதிடும் போது முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுக்கப்பட்டபோது கட்சியே இரண்டு அணியாக பிரிந்து கிடந்தது. அ.தி.மு.க.வும், இரட்டை இலை சின்னமும் முடக்கி வைக்கப்பட்ட நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் மீது எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்?.அதனால், சபாநாயகரின் உத்தரவே அரசியல் சாசனத்திற்கு எதிரானது.  ஆனால், இதை 18 பேரிடம் கூறி விளக்கம் கேட்டு இருந்தால், உரிய பதிலளித்து இருப்பார்கள். சபாநாயகர் தன்னிச்சையாக முடிவெடுத்து 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார். முதல்-அமைச்சரை குறுக்கு விசாரணை செய்ய எங்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான விதிமீறல் என வாதிட்டார்.மூத்த வக்கீல்  ராமன் இன்று தொடர்ந்து  வாதாடினார் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம் . எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவது தவறு என வாதிட்டார். டிடிவி தினகரன் தரப்பு வக்கீல் வாதம் இன்று நிறைவடைந்தது.  நாளை , மற்றும் வெள்ளியன்று சபாநாயகர் தரப்பு சார்பில் வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகிறார்.
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share