கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


பிக்பாஸ் வீட்டில் ஜால்ரா அடித்து., கமலிடம் சிக்கிய நபர்! 

பிக்பாஸ் வீட்டில் அதிகம் ஜால்ரா அடிப்பது குறித்த கேள்விகளுடன் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடையே பேசும் வீடியோ வெளியானது.பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 5-ஆவது வார இறுதியில் ஒளிபரப்பாகி உள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களை அகம் டி.வி. வழியே சந்தித்து உரையாடுவது வழக்கம். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இதன்படி இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான 3 புரமோஷன் வீடியோக்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபரின் பெயர் அடங்கிய அட்டையுடன் கமல்ஹாசன் வலம் வருகிறார். இதைத்தொடர்ந்து கையில் இரண்டு பொம்மைகளுடன் வரும் கமல்ஹாசன் இந்த வீட்டில் ஜால்ரா அடிப்பது யார்? என்றும் தன் கையில் வைத்திருக்கும் அதற்கான பொம்மையை யாரிடம் கொடுக்கலாம்? என்றும் கேள்வி எழுப்புகிறார். கமல்ஹாசனின் இக்கேள்விக்கு பதிலளித்த பொன்னம்பலம், மும்தாஜ் என பதிலளித்துள்ளனர். இதனால் மும்தாஜின் முகம் மாறியுள்ளது.இதே கேள்வியை மும்தாஜிடம் கமல்ஹாசன் கேட்க மும்தாஜ், வைஷ்ணவி என பதிலளிக்கிறார். ஆனால் வைஷ்ணவி ஜால்ரா என்பதற்கு அர்த்தம் என்ன என்று கமலிடம் கேட்க, கையில் வைத்திருக்கும் பொம்மைகளுடன் கமல் நடித்துக் காட்டியுள்ளார். இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *