சென்னை ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து.. ரயில்வே டிஜிபி அதிரடி உத்தரவு..!!

இன்று சென்னை புறநகர் தொடர்வண்டி  பரங்கிமலை ரயில் நிலையத்தை அடைந்த போது, ரயில் நிலைய தடுப்புச் சுவர் மீது படிகட்டில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகள் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.இன்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் பாதையில், புறநகர் ரயில் இயக்கப்பட்டது. அப்போது படியில் தொங்கிக்கொண்டு பயணம்செய்தவர்கள், ரயில் பாதை அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-   பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்,  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை அகற்றும் வரை அந்த வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்று உறுதி அளித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *