கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?


பாம்பு ஒயின் தயாரித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

சீனாவில் கொடிய விஷம் கொண்ட பாம்பின் மூலம், ஒயின் தயாரிக்கப்படும். இந்த ஒயின் மிகவும்  மருத்துவ குணம் கொண்டது என சீனர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால், தற்போது இந்த நடைமுறைக்கு சீன அரசு தடை வைத்துள்ளது. இந்நிலையில், சீனாவை சேர்ந்த 21 வயது  பெண் ஒருவர், இ – காமர்ஸ் மூலமாக  ஆன்லைன் மூலமாக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். குவாங்டாக்கில் அதிக வகையான பாம்புகள் உள்ளதால், அங்கே அதன் விற்பனை அதிகமாகவே நடைபெறுவது வழக்கம்.

உள்ளூர் கூரியர்  மூலம், ஆன்லைன் மூலமாக வாங்கப்பட்ட விஷப்பாம்பு, அந்த  பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.  இதன்பின், ஒயின் தயாரிப்பதற்காக அந்தக் கொடிய விஷம் கொண்ட பாம்பை பாட்டிலில் இருக்கும் ஆல்கஹாலில் அடைக்க முயன்றிருக்கிறார். ஆனால் அந்த பாம்பு பாட்டிலில் இருந்து தப்பித்து வெளியே வந்து அந்த பெண்ணை கடித்துவிட்டு தப்பித்து ஓடி விட்டது.

விஷ பாம்பு கடித்ததால் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாம்பு ஒயின் என்பது என்ன? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறதா. அப்டியென்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்.  அதாவது, முழுப்பாம்பையும் ஆல்கஹாலில் ஊற வைத்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய சாறிலிருந்து தயாரிக்கப் படுவது பாம்பு ஒயின் என்று சீனர்கள் தெரிவிக்கின்றனர். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *