தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி ஆறுதல்!

By Admin - July 29th, 2018

Tags : TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஆறுதல் கூறினர்.சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார் டிடிவி தினகரன்.இந்நிலையில், அடையாறில் இருக்கும் டிடிவி தினகரனின் வீட்டில் மர்ம நபர்கள் இன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் தினகரனின் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன்பாக ஓட்டுநர் பாண்டித்துறைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் அவரது மகள் ஜெயஹர்ஷினி ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் தினகரன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து பலத்த சேதமடைந்தது.

கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளர் பதவியில் இருந்து புல்லட் பரிமளம் என்பவரை நீக்கிவிட்டு உமா மகேஸ்வரி என்பவரை அந்த பதவியில் தினகரன் நியமித்துள்ளார். இதனையடுத்து தினகரனை சந்தித்து நன்றி தெரிவிக்க இன்று உமா மகேஸ்வரி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக உமா மகேஸ்வரி மீது பரிமளம் தரப்பினர் தாக்குதல் நடத்த பெட்ரோல் குண்டுகளுடன் காரில் வந்துள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக புல்லட் பரிமளத்தின் காரில் இருந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதனையடுத்து பரிமளத்தின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் புல்லட் பரிமளத்தை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் வீட்டில் அடையாறு துணை ஆணையர் ஷசாங்சாய் நேரில் ஆய்வு செய்தார்.

டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி | TTV Dhinakaran | Petrol Bomb

https://www.youtube.com/watch?v=mjI5eyPHst0

Related Posts

டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய…

காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன் பேட்டி

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்க தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை…

மத்திய அரசை எதிர்க்கக் கூடிய ஆற்றல் டி.டி.வி.க்கே உண்டு : தங்கத்தமிழ்செல்வன்

“நாங்கள் 18 பேரும் இடைத்தேர்தலை சந்திப்போம்!”- தங்கத்தமிழ்செல்வன் பேட்டி மதுரை மாநகர மாவட்ட தினகரன் அணி சார்பாக நடைபெற்ற மொழிப்போர்…

பெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்…

“திருவாரூர் கருணாநிதி தொகுதி மட்டுமல்ல” இனி எனது தொகுதி – தினகரன்

கருணாநிதி இருந்தவரை மட்டுமே திருவாரூர் அவரது தொகுதி என்றும், இனி திருவாரூரில் அமமுக மட்டுமே வெற்றி பெறும் என்றும் தினகரன்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?