திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் : ராகுல் காந்தி

தமிழக மக்களை போன்று திமுக தலைவர் கருணாநிதி வலிமையானவர் என அவரது உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ராகுல் தெரிவித்துள்ளார்.

உடல் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நான்காவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்தவகையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பயணிகள் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், திமுக தலைவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் உடன் சென்று நலம் விசாரித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். கருனாநிதி நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் நீண்ட கால நட்பு உண்டு. தமிழக மக்களை போன்று கருணாநிதி வலிமையானவர். தமிழ்நாட்டு மக்களுக்கு மிக உத்வேகமாக இருப்பவர் கருணாநிதி. கருணாநிதி நலம் பெற சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றார்.

DMK Chief Karunanidhi is fine: Rahul Gandhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *