தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க சென்னை வந்தார் வெங்கையா நாயுடு

By Admin - July 29th, 2018

Tags : DMK, Category : Tamil News,

சென்னை,தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.காவேரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு 8 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார்.

அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரும் உடனிருந்து அவரை வரவேற்றனர்.இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று நண்பகல் 12.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி கேட்டறிகிறார்.

Related Posts

திருவாரூர் தொகுதி வேட்பாளர் ஸ்டாலின்? துரைமுருகன் அளித்த பதில்!

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.முன்னாள் முதல்வர் கலைஞரின்…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்!

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாராகி உள்ளது. இன்று மாலை அந்த பட்டியலை திமுக தலைவர்…

நெல்லையில் ரயிலை மறித்த முன்னாள் எம்எல்ஏ

நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா ரயில்வே பாலத்தில் மறியல் செய்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர்…

கருணாநிதி மீண்டு வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என பேசுவார் – நடிகை குஷ்பு

சென்னைவயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர்…

ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி!

டி.டி.வி. தினகரனின் அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ளார். செந்தில் பாலாஜி ஏற்கனவே…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?