தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

குடி போதையில் பெண் பயணியை கடத்த முயன்ற "ஓலா" ஓட்டுநர்

By Admin - July 7th, 2018

Tags : Bangalore, Kidnapping, OLA, Ola call taxi, Category : Tamil News,

பெங்களூரு: பெங்களூரில் பெண் பயணியை குடிபோதையில் கடத்திச் செல்ல முயன்ற ஓலா கால் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் கால் டாக்சி ஓட்டுநர்கள் குடிபோதையிலும், வக்கிர புத்தியிலும் தனியாக வரும் பெண் பயணிகளிடம் அத்துமீறி நடப்பதும், அவர்களை கடத்த முயல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் பெங்களூரில் தனியார் நிறுவன ஊழியரான பெண் ஒருவர், புதன்கிழமை இரவு பனஸ்வாடி பகுதியிலிருந்து விமான நிலையத்துக்கு ஓலா கால் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார். இரவு 11 மணிக்கு மேல் கால் டாக்சி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, விமான நிலையத்துக்கு செல்லாமல் வேறு வழியில் செல்வதை அந்தப் பெண் கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த பெண் காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறி இருக்கிறார்.

ஆனால் அதனை சட்டை செய்யாமல் குடிபோதையிலிருந்த ஓட்டுநர் காரை இன்னும் வேகமாக ஓட்டியுள்ளார். தொடர்ந்து சுங்கச்சாவடியை கார் அடைந்தபோது, அந்தப் பெண் கூச்சலிட்டு உதவி கோரியுள்ளார்.  பெண்ணின் கூச்சலை கேட்ட  பிற வாகன ஓட்டிகளும், சுங்கச்சாவடி ஊழியர்களும் காரை தடுத்து நிறுத்தி பெண்ணை மீட்டனர். ஓட்டுநரை காரில் இருந்து இறக்கி சிக்கஜலா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் சுரேஷ் என்பதும் குடிபோதையில் இருந்த சுரேஷ் பெண்ணை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Posts

டிரைவர் முஸ்லீம் என்பதால் அப்படி செய்தேன்.,

உத்தர பிரதேசத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஒருவர்,ஓலா கேப் ஓட்டுநர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் புக்கிங்கை கேன்சல்…

Mersal Houseful Crowd at Sri Balaji theatre Vannarpet, Bangalore

Today’s Houseful Crowd at Sri Balaji theatre Vannarpet, Bangalore.

Prakash Raj’s Open Letter to Bangalore Press Club

Top character artist of South India Prakash Raj’s alleged remarks on ‘actors entering politics would…

Mersal Banners at Pushpanjali Theatre, BN Pura Bangalore

Banners for #Mersal at Pushpanjali Theatre, BN Pura Bangalore. #MersalAtKarnataka

டி வில்லியர்ஸ் விளாசலில் பஞ்சரானது பஞ்சாப்!

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின்…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share