தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

எடப்பாடி கார் மீது கல்வீச்சு - மீடியாக்களில் வெளிவராத செய்தி

By Admin - July 21st, 2018

Tags : Edappadi Palanisami, TTV Dhinakaran, Category : Tamil News,

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிகளை கடந்த நிலையில், அங்கிருந்து டெல்டா பாசனத்திற்காக, நீர் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டப் பணிகள் காரணமாக, எடப்பாடி பழனிசாமி மீது சேலம், தருமபுரி மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. சொந்த மாவட்ட மக்களிடம் அதிருப்தியை சம்பாதிப்பது நல்லதல்ல என பழனிசாமி நினைக்கிறார்.

மக்களின் அதிருப்தியை மாற்றி, ஆதரவை அதிகரிக்கும் விதமாக, நேரில் சென்று மேட்டூர் அணை நீரை திறந்துவிடுவது நல்ல பலன் அளிக்கும் என்றும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டார். ஒரு முதல்வரே நேரில் வந்து அணையில் நீர் திறந்துவிடுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்காக, புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலத்திற்குச் சென்றார். சாலை மார்க்கமாக சேலம் அருகே சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென முதல்வரின் கார் மீது கல் வீசி, மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதில், முதல்வரின் கார் லேசாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அவரது காரை மாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வேறு ஒரு காரில் சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், அடுத்த நாள் முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்பினார்.

எனினும், அவரது கார் மீது கல் வீசப்பட்டது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

எடப்பாடி கார் மீது கல்வீச்சு – மீடியாக்களில் வெளிவரத செய்தி | Edappadi Palanisami Tamil News

Related Posts

நெல்லை சீமையில் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Nellai Gangaikondan Tirunelveli

நெல்லை சீமையில் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Nellai Gangaikondan Tirunelveli விடுகதை ஆழக் குழி தோண்டி…

மக்கள் செல்வாக்கு டி.டி.வி.தினகரனுக்கு உண்டு : ஜெயானந்த்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், ‘போஸ்’ மக்கள் பணியகத்தின் சார்பில் முதல் அரசியல் பயணத்தைத்…

ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்

செனனை அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:- ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது…

தினகரனுடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்திப்பு

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி…

உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட அவமானத்தை எப்படி தொடைக்க போறீங்க சாமி? கமல்ஹாசன் கேள்வி!

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?