கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?


காவிரி மருத்துவமனையில் பரபரப்பு – ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இன்று, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருணாநிதியை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று இரவு 8 மணியளவில் காவிரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வரை மருத்துவமனை சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மேலும், கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது காவிரி மருத்துவமனை வந்துள்ளதால் அப்பகுதியில் அதிக அளவில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

மேலும், திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைவரும் காவிரி மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *