கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?


கருணாநிதி உடல்நலம் விசாரிக்க சென்ற ஓ பி எஸ், ஜெயக்குமார்!

தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலம் விசாரிக்க துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி  உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் நலம் விசாரிக்க கோபாலபுரம் சென்றுள்ளனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த வருடம், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நேற்று செவ்வாய் கிழமை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திடீரென வீண் வதந்தி பரவியது.

இதுகுறித்து திமுகவின் செயல் தலைவர் இன்று காலை அளித்துள்ள பேட்டியில், ”திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தலைவர் கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என முக ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.இன்று மாலை, ”கருணாநிதி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை நேரில் யாரும் பார்க்க வரவேண்டாம். எனவும், சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காச்சல் ஏற்பட்டுள்ளது, அவருக்கு மருத்துவ சேவைகள் அனைத்தும் வீட்டிலே வழங்கப்பட்டுள்ளது.

எனவும் வயது முதிர்வு காரணமாக உடல் நெளிந்து காணப்படுகிறார்” என்றும் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சற்றுமுன், கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி  உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்தனர். இவர்களுடன் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளனர்.

திடீரென ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்துள்ளதால் ஒரு வித பரபரப்பு எற்பட்டது.திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ”அவர் நலமுடன் உள்ளார்” என தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எங்களை திமுக தலைவர் கருணாநிதி அடையாளம் கண்டு கொண்டார். அவர் நல்கமுடன் உள்ளார். அம்மா உடல் நலம் சரியில்லாதபோது அவர்கள் (திமுக சார்பில்) நலம் விசாரித்து சென்றனர். அந்த வகையில் நாங்களும் தற்போது வந்து உள்ளோம். இந்த நலம் விசாரிப்பு ஒரு அரசியல் பண்பாடு தான்” என்று தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி உடனலம் குறித்து நலம் விசாரிக்க இன்னும் பல அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் வர உள்ளதாக தகவலாக தெரிவாகியுள்ளது. 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *