ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமன்

சென்னை: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றிருந்தார்.

அவருடன் மைத்ரேயன், கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.ஆனால் மைத்ரேயனை மட்டும் சந்தித்த நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்து விட்டார். இதனால் பெரும் அதிர்ச்சி, ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி வந்தார் ஓ.பி.எஸ்.
இன்று இரவு அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அவரது கருத்தை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றி விட்டார் ஓ.பி.எஸ்.நிர்மலா சீதாராமன் குறித்த செய்திக்கு அவர் பதிலளிக்கையில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார் என்று மட்டும் தெரிவித்தார்.

வேறு எந்த கருத்தையும் அவர் சொல்லவில்லை, பதிலளிக்கவும் இல்லை.
இருப்பினும் டெல்லியில் ஏதோ நடந்துள்ளது என்பதை தனது பதில் மூலம் சூசகமாக உணர்த்தி விட்டார் ஓ.பி.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *