ட்விட்டரில் Rahul Gandhi பெயர் உலக அளவில் ட்ரெண்டில் உள்ளது.  

சமூக ஊடகமான ட்விட்டர் உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது.  ஒவ்வொரு செய்திகளும் #டேக் மூலம் பதிவிடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இதனால் செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்ல ட்விட்டர் முதலாவதாக பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபரில் தொடங்கி, கடைக்கோடி கிராமத்தில் வாழும் மக்கள் வரை ட்விட்டரை பயன்படுத்தி செய்திகளை பதிவிடுகின்றனர். அதிலும் இந்தியாவில் ட்விட்டர், அரசியல் பேசுகிறது.  ட்விட்டரில் அனைவரும் போட்டி போட்டுகொண்டு பதிவு செய்து வருகிறார்கள்.

சமீப காலமாக அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் இது போன்று  ஹாஸ்டேக் வைத்து பதிவு செய்து வருவது வழக்கமாகி வருகிறது.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று காலை விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் பேசி வந்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விவாதத்தில் பங்கேற்று பேசினார்.தொடர்ந்து பேசிய ராகுல் மத்திய அரசு மீதும், மோடி மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தார்.  

இதைத்தொடர்ந்து, மக்களவையில் பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி  யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவினார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி  திரும்ப அழைத்து கை குலுக்கினார்.இந்நிலையில், ட்விட்டரில் Rahul Gandhi பெயர் உலக அளவில் ட்ரெண்டில் உள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *