மோடியை கதற விட்ட ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று காலை விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் பேசி வந்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விவாதத்தில் பங்கேற்று பேசினார்.தொடர்ந்து பேசிய ராகுல் மத்திய அரசு மீதும், மோடி மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்தார்.

இதைத்தொடர்ந்து, மக்களவையில் பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி  யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவினார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி  திரும்ப அழைத்து கை குலுக்கினார்.இந்நிலையில், ட்விட்டரில் Rahul Gandhi பெயர் உலக அளவில் ட்ரெண்டில் உள்ளது.

 

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *