சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்

’ஒருகாலத்தில் முன்னணியில் இருந்த ரஜினி. . ’ என சொல்லும் அளவிற்கு ரஜினிகாந்த்தின் இமெஜ் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் தொடர் படங்களின் தோல்வி என கூறப்பட்டாலும் உண்மையில் தூத்துக்குடி சம்பவத்தின் போது அவர் அளித்த பேட்டியே.

40 ஆண்டுகாலமாய் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருந்த ரஜினியின் சினிமா வாழ்வில் தற்போது சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்த சூப்பர் ஸ்டார் உதிக்கும் நேரம் என கோலிவுட்டினர் கூறுகின்றனர். இந்நிலையில் அவருக்கு மேலும் சறுக்கலாக கோச்சடையான் பட விவகாரம் அமைந்துள்ளது.

அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கோச்சடையான் பட தயாரிப்பின் போது ஆட் பீரோ என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது. நேற்று லதா ரஜினிகாந்திடம் ஜூலை 10ம் தேதிக்குள் பணத்தை திருப்பி தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ’தமிழக மக்களிடம் சட்டத்தை மீற கூடாது என சொல்லும் ரஜினியின் மனைவியே சட்டத்தை மீறியுள்ளார், முதலில் உங்கள் மனைவியை திருத்துங்கள் பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கலாம்’ என கேள்விகள் சமுக வலைதளங்களில் எழும்பியுள்ளன.

ஆனால் இதுவரை ரஜினிகாந்த் மௌனம் காப்பது அவரது இமேஜுக்கு மேலும் பாதிப்புக்குள்ளாகும் என கருதப்படுகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *