1000 கோடி கொடுங்க! வர வேண்டியது வந்தால் தான் ரஜினி அரசியலுக்கே வருவாரோ?

அது நடந்ததையே மக்கள் மறந்து போனார்கள். சுமார் ஆறு மாதத்திற்கு முன்பாக, அரசியலில் குதிக்கிறேன், என்று அறிக்கை விட்டார் ரஜினி. அதைக் கேட்டு, நாடே ஆச்சர்யப்படும், என்று எதிர்பார்த்தார். ஆனால், மக்கள், ஒரு ஏளனப் புன்னகையுடன், ரஜினியின் பேட்டி சேனலைத் தவிர்த்து, அடுத்து சேனலைப் பார்க்கத் துவங்கினார்கள்.ரஜினி சொன்னது, அவருக்கே மறந்து போயிருக்கும். அப்புறம் பாத்துக்கலாம், என்று சொன்ன ரஜினியை, பி.ஜே.பி. விடுவதாக இல்லை.தமிழகத்தில், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும், பி.ஜே.பி.யை நிமிர வைத்து, தக்க வைக்க, ரஜினி நல்ல சாய்ஸ் என்று முடிவெடுத்தது. இதற்கேற்றவாறு, பல ரகசிய சந்திப்புகுள் எல்லாம், சத்தமில்லாமல் நடைபெற்றன.

இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் லதா ரஜினிகாந்த். ஏற்கனவே, இவரது அடாவடி நடவடிக்கையால், பலர் பாதிக்கபட்டு, நீதி மன்றம் சென்றதெல்லாம் நாடே அறி்ந்த செய்தி.சுப்ரீம் கோர்ட், அதிரடியாக உத்தரவிட்டதால் தான், ஒரு சொத்து பிரச்சினைக்கான தொகையை நேர் செய்தார். ஏற்கனவே, இவர் நடத்தி வந்த ஆஸ்ரம் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர்கள் எல்லாம், ஆறு மாதமாக சம்பளம் பாக்கி தராததால், ரோட்டில் இறங்கி ஸ்டிரைக் செய்தனர்.அந்தப் பள்ளிக் கட்டிடத்தின் வாடகை கூட சரியாக கொடுக்கப் படவில்லை. இந்த மாதிரியான “சிஸ்டம்” கொண்ட லதாவின் பிடியில் தான், ரஜினி இருக்கிறார்.கடந்த 10-7-2018 அன்று, டார்ஜிலிங்கிலிருந்து சென்னை வருவதாக இருந்தார் ரஜினி. அதனால், அவரைத் தற்செயலாகச் சந்திப்பது போல, சந்திப்பு நடத்த சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டன.

ரஜினி சென்னை வந்ததும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கூட்டணி வைக்க சம்மதிப்பார், என்று லதா அமித்ஷாவிடம் உறுதி அளித்தார்.அதனால், கடந்த 9-ஆம் தேதியே, சென்னை வந்து விட்டார் அமித்ஷா. ஆனால், அன்று இரவு, லதா, அமித்ஷாவைப் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.ஆயிரம் கோடி ரூபாய் அட்வான்ஸ் பணம் வைத்தால் தான், ரஜினி பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிப்பார், என்று கூறியதைக் கேட்டு, ஆடிப் போய் விட்டார் அமித்ஷா.லதா கேட்டதற்கு, எந்த பதிலும் இல்லாததால், ரஜினியை அடுத்து நாள் வர வேண்டாம், என்று சொல்லி விட்டார். ரஜினியும் அடுத்து நாள் சென்னை வரவில்லை.       வர வேண்டியது வந்தால் தான் ரஜினி அரசியலுக்கே வருவாரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *