என்னால உங்கள திருப்திப்படுத்த முடியும், ஆனால் நீங்கதான்..ராகவா லாரன்ஸ்க்கு பதிலடி கொடுத்த ஸ்ரீ ரெட்டி .!

 

சினிமாவில் பட வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.இந்நிலையில் தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக  சர்ச்சையை கிளப்பினார்.ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

அதில் அவர் நான் தெலுங்கில் போராளி பட ஷூட்டிங்கின் போது என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் அளிக்காத ஸ்ரீரெட்டி, தற்போது இதைபற்றி ஏன் கூறுகிறார்.மேலும் எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் எனவும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்ய நான் என்ன முட்டாளா?

 

நான் எந்த தவறும் செய்யவில்லை.அது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் நேரடியாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை பார்க்கும்போதும் பரிதாபமாக இருக்கிறது. தான் ஒரு சிறந்த நடிகை என்று ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம்.அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன்.அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்ட வேண்டும்.

 

உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்தியாக இருந்தால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன் என கூறினார். மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. மேலும் அனைவர் முன்பும் நடித்துக் காட்ட உங்களுக்கு நடித்து காட்ட  விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன் என கூறினார்.

 

இந்நிலையில் தற்போது இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி, மற்றொரு பதிவில் அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.அதில் நான்விசாரணைக்கு வந்தால் நீங்க தோற்று போயிடுவீங்க,மேலும் எனக்கு திறமை இருக்கிறது உங்களை திருப்தி படுத்தி, உங்க படத்தில் நடிக்க நான் தயார் என கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *