தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தமிழ் படம் -2: சினிமா விமர்சனம்! | Tamilpadam 2 Movie Review

By Admin - July 12th, 2018

Tags : Ajith, Siva, Tamilpadam 2, Vijay, Category : Tamil News,

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் நம்ப முடியாத சில சாகாசங்களை கிண்டல் அடித்து எடுத்து முதல் பாகத்தில் வெற்றி கண்ட கூட்டணி இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ளது.

தமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.

போன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

சிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.

படத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

அதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.

செல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா…ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.

மேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

இத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.

மொத்தத்தில் லாஜிக் பார்க்காமல் சிரிப்பை மட்டுமே நம்பி பார்க்கலாம்

விஜய் FANS பாவம் சும்மாவே வச்சு செய்வாங்க இதுல வச்சு செஞ்சிட்டாங்க.

விஜயின் சர்கார் படத்தை வச்சு செய்த தமிழ்படம் 2 | Tamilpadam 2 Movie audience review | Mirchi Siva

https://www.youtube.com/watch?v=A5Tb4OKBBy4

Related Posts

Don’t compare me with Vijay and Ajith – Siva Karthikeyan

Siva Karthikeyan has tasted yet another success with his latest release ‘Remo’. He became the…

எந்திரனுக்கு பிறகு விஸ்வாசம் படம் தான் டாப் வசூல் : விநியோகஸ்தர்

விஸ்வாசம் அஜித்தின் விஸ்வாசமான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட படமாக அமைந்துவிட்டது. படத்திற்கு வந்த நல்ல விமர்சனம் வசூலை எங்கேயோ கொண்டு…

இளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் விஸ்வாசம் வந்து செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில்…

தமிழில் அதிகம் வசூல் செய்த படங்கள்! All Time Kollywood box office collection

Kollywood box office, Here is the list of top 10 films with the highest share…

Why Is Vijay Not Promoting Adirindhi?

Vijay is Ilayathalapathy Star in Kollywood with following just second to Super Star Rajinikanth. This…




அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?