தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கருணாநிதியை பார்க்க முதல் அமைச்சர் இபிஸ் , துணை முதல் அமைச்சர் ஒபிஸ் வருகை

By Admin - July 30th, 2018

Tags : DMK, EPS, Karunanidhi, Ops, Category : Tamil News,

சென்னை,வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.அரசியல் கட்சி தலைவர் கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்து செல்கிறார்கள்.

கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் ஆஸ்பத்திரியின் முன்பு குவிந்து உள்ளனர். ஏராளமான தொண்டர்கள் விடிய விடிய அங்கேயே நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். முதல் அமைச்சர் வருகையால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மருத்துவமனைக்குள் சென்ற முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர். 

Related Posts

எம்.எல்.ஏக்கள் சம்பளம்போல் உயர்த்திய பேருந்து கட்டணம், டீசல் விலைபோல் குறைத்த தமிழக அரசு

எம்.எல்.ஏக்கள் சம்பளம்போல் இரு மடங்கு உயர்த்திய பேருந்து கட்டணம்…டீசல் விலைபோல் பைசாவில் குறைத்த தமிழக அரசு : சபாஷ்..பாஜக வரவேற்பு!…

தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த சுயநலப்புலி ஸ்டாலின் : தினகரன்

#சுயநலப்புலி கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார்,அவன் தியாகியா…

“எம்ஜிஆரை போல என்னை நீக்கி விட்டார்கள்”- முதல்வர் மீது, டி.டி.வி. தினகரன் தாக்கு

“எம்ஜிஆரை போல என்னை நீக்கி விட்டார்கள்”- முதல்வர் மீது, டி.டி.வி. தினகரன் தாக்கு எம்ஜிஆரை, எப்படி கட்சியில் இருந்து கருணாநிதி…

கலைஞர் கருணாநிதி குடும்பம்

Karunanidhi family

திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுக மாநில அமைப்புச்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?