ஆர்.கே நகர் தொகுதிக்கு வருவேன், யாருக்கும் பயப்பட மாட்டேன் : டிடிவி தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான தினகரன் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தனது தொகுதிக்கு வந்தார். அப்போது அங்கு அவர் வருவதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அ.தி.மு.க – தினகரன் தரப்பினரிடையே மோதல் உருவானது.

திடீரென மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து கற்கள் வீசப்பட்டதில் எண்ணூர் காவல் ஆய்வாளர் பிரேமா காயமடைந்தார். தலையில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கல்வீச்சு நடத்தப்பட்டதால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது. இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.  பின்னர் பேட்டி அளித்த டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் நலத்திட்ட உதவிகள் செய்யக்கூடாதென ஆளுங்கட்சியினர் சதி என குற்றஞ்சாட்டினார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு வருவேன், யாருக்கும் பயப்பட மாட்டேன் | TTV Dhinakaran R.K Nagar press meet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *