இளைஞர்களின் அரசியல் கதாநாயகன் டிடிவி தினகரன் – உலகறிய செய்த நெல்லை கல்லூரி மாணவர்கள்

மக்கள் தலைவன் டி.டி.வி யின் சிறப்பு …
நேற்று நடந்த சுவையான சம்பவம் – திருநெல்வேலி மாவட்டத்தில் ….

திருநெல்வேலி – சங்கரன்கோவில் போகிற வழியில் உள்ள PMT கலைக்கல்லூரியில் நிகழ்ந்த காட்சி அது..

எனக்கு விபரம் தெரிஞ்சு கலைஞர் – ஜெயலலிதாவுக்கு கூட இப்படி அரசியல தாண்டி மாணவர்களுடைய ரசிகர் பட்டாளம் இருந்து பார்த்ததில்ல.,

டிடிவி தினகரன் அவர்கள் நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் –

திருநெல்வேலி – சங்கரன்கோவில் செல்வதாக செய்தி பரவுகிறது.,

அக்கல்லூரிக்குள்ளும் இச்செய்தி காட்டுத்தீயாய் பரவுகிறது –

மாணவ – மாணவியர் மட்டுமில்ல அக்கல்லூரியின் principal கூட ரோட்டுக்கு ஓடி வந்து நிற்கிறார் –

அனைத்து ஆசிரியர்களும் ரோட்டுக்கு ஓடி வருகின்றனர் –

அந்த வழியாக போகப்போகும் தினகரன் அவர்களை காண

இச்செய்தி கேள்விப்பட்டு காவல்துறையும் – என்னசெய்வதென்று அறியாமல்

அந்தக்கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள் என அனைவரும் ரோட்டில் குவிவதால் –

அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஓடிவருகிறது.,

அவ்வழியாக பயணிக்கபோகும் தினகரன் அவர்களை யாரும் குறுக்க – மறுக்க போய் நிண்டு டிஸ்டர்ப் பன்னக்கூடாது –

ஓரமா நிண்டு பார்த்துட்டு போங்கனு காவல் துறை அந்த ஆசிரியர்களிடமும் – மாணவ – மாணவியரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.,

நம்ம ஆளுக எல்லாத்துக்கும் ஆமா போடுதுங்க

அலறிக்கொண்டு வாகனங்கள் அணிவகுத்து வருவதை – மாணவ – மாணவியர்கள் – உணருகிறார்கள் – தங்களை அறியாமல் அலறுகிறார்கள் – டிடிவி – டிடிவி யென்னு – வின்னை பிளக்குமளவுக்கு.,

1000 வாகனத்திற்கு மேல் அணிவகுக்க – கடும் ஆரவாரம் சூழ அக்கல்லூரி சாலையில் வருகிறார் – தமிழகத்தின் அடுத்த முதல்வர்

ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கி நிண்டுக்கொண்டிருந்த அந்த மாணவ செல்வங்கள் –

ஓடி வருகின்றனர் –

வாகனங்கள் வேகமாக வருவதை கூட உணராமல்.,

தங்களின் தலைவனை காண

காவல்துறை மாணவர்களை தள்ளி போக சொல்கிறது – மாணவர்கள் மறுக்கிறார்கள்

டிடிவி அவர்களுடைய வாகனம் நகர முற்படுகிறது –

மாணவர்கள் வழிவிட மறுக்கிறார்கள் 😍😍😍

வெளியே வாங்கள் நாங்கள் தங்களை பார்க்கவேண்டும் சார் ப்ளீஸ் சார்னு ப்ளீஸ் சார்னு மாணவர்கள் சிறு குழந்தைகளாக கெஞ்சுகிறார்கள்

மாணவர்களின் – அன்பு கோரிக்கை – பாசத்தலைவனால் ஏற்கப்படுகிறது

அக்கல்லூரி குழந்தைகளின்
ஆசையை நிறைவேற்ற தன்னுடைய வாகனத்தின் மேல்திரை கதவை திறந்து வெளிவந்தார் மக்கள் செல்வர் டி.டி.வி அவர்கள் ….

அந்த நிகழ்வை நீங்களே பாருங்க அவ்வளவு அழகு…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*