தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்

By Admin - July 23rd, 2018

Tags : 18_mlas_disqualification_case, Aiadmk, TTV Dhinakaran, Category : Tamil News,

சென்னைமுதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரிடம்  மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில்  நடைபெற்றது.

இதில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு  3-வது நீதிபதி சத்யநாராயணன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு தினமும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.முதலில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராமன் தனது வாதத்தை முன்வைத்தார். 

மாறுப்பட்ட தீர்ப்பில் மட்டுமே 3-வது நீதிபதி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் இரு நீதிபதிகளுக்குள் ஒன்றுபட்ட கருத்து உள்ளது என்றார். உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.சபாநாயகர் உத்தரவு, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றார். 18  எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது மற்றும் உள்நோக்கம் கொண்டுள்ளது. தங்கள் தரப்பு நியாயங்களை நிரூபிக்க போதிய அவகாசம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தார். எம்.எல்.ஏ. ஜக்கையனுக்கு மட்டும் மாறுபட்ட முடிவை சபாநாயகர் எடுத்துள்ளார்.

சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணம் அடிப்படையில் தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். ஜக்கையனுக்கும் 18 பேருக்கும் வெவ்வேறு அளவுகோலில் மதிப்பீடு செய்துள்ளனர்.முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் மனு தந்த போது அதிமுகவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தையும் அப்போது தேர்தல் ஆணையம் முடக்கி இருந்தது.

அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும் சபாநாயகர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்குகள் சுப்ரீம் கோர்ட்  நிலுவையில் உள்ளது என்றார்.

Related Posts

தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு

தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழித்ததாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது….

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அணியை அறிவித்தார் தினகரன்

JUSTIN “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அணியை அறிவித்தார் தினகரன்

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணை

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு…

“பொள்ளாச்சி விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுவதிலும் பதற்றம் தெரிகிறது!” – டிடிவி தினகரன்

இரண்டு மாதங்களில் தேர்தல் முடிந்து இந்தியாவில் தலைகீழ் மாற்றங்கள் வரும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்….

சசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி

அதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share