டிடிவி தினகரனை இளைஞர்களுக்கு ஏன் அதிகமா பிடிச்சிருக்கு?

*தம்பி எதுக்கு நீங்க இவ்வளவு தீவிரமா தினகரனை* *ஆதரிக்கிறீங்க…?*
*ஒரு வருஷத்துக்கு முன்ன அவரை யாருக்காவது தெரியுமா..?*

*இப்படி பல கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு…*

*நான் ஒரு இளைஞன், இளைஞர்கள் கிட்ட போய் உங்களுக்கு காந்தி பிடிக்குமா..? நேதாஜி பிடிக்குமானு..? கேட்டுப் பாருங்க 90% இளைஞர்கள் நேதாஜினு தான் பதில் சொல்லுவாங்க… ஏன் தெரியுமா அவனுங்களுக்கு அடிமையை விட எதிர்த்து அடிப்பதே பிடிக்கும்…*

*உடனே தினகரன் அப்படி யாரை எதிர்த்து என்ன சாதிச்சிட்டார்னு கேள்வி உங்க மனசுல தோனும்…*

*ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி உலகத்துக்கே தெரியும்… அதுல 20ருபாய் டோக்கன் பணம் அப்படி இப்படினு என்னதுனாலும் இருக்கடும் அதுல எது உண்மை எது பொய்னு ஆராய்வதை தனியா வச்சிக்கலாம்… நான் சொல்ல வர்றது ஒன்னுதான் தினகரன் ஜெய்க்க கூடாதுனு மத்திய அரசு மாநில அரசு காவல்துறை ஏன் தேர்தல் ஆணையம் கூட அவருக்கு எதிரா இருந்ததுனு எல்லாருக்குமே தெரியும்… இடைத் தேர்தல்னா ஆளுங்கட்சி எவ்வளவு பணம் செலவு செய்யும்னு நாம இதுக்கு முந்தைய தேர்தல்களில் பார்த்திருக்கோம்… இதுல தோத்துட்டா தன் அரசியல் எதிர்காலம் என்னவாகும்னு தினகரனுக்கு தெரியாதா..? அப்படி இருக்கும் போது வேறொரு வேட்பாளரை நிறுத்தாம ஒரு துளி கூட பயம் இல்லாம நானே நிக்குறேனு நின்னு தனக்கு கேட்ட சின்னம் கிடைக்காம கிடைச்ச சின்னத்தை வாங்கிக்கிட்டு எல்லா அடக்குமுறைகளையும் அடிச்சு நொருக்கி ஜெயிச்சான் பாரு அந்த தில்லு…. அது தான் என்னை மட்டுமில்ல தமிழ்நாட்டுல இவ்வளவு இளைஞர்களையும் அவர் பக்கம் இழுத்துச்சு…*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *