முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கேரள கனமழை வெள்ளம்; நடிகர் ரஜினி ரூ.15 லட்சம் நிதியுதவி

Tags : KERALA, RAJINIKANTH, Category : TAMIL NEWS,

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

கேரளா மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அம்மாநில மக்களுக்கு உதவிக்கரங்கள் நீட்டப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள், பல்வறு மாநில அரசுகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவும் பொருட்டு, அம்மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் வழங்கியுள்ளார். Actor Rajinikanth donated Rs 15 lakhs towards the relief fund for the people who are affected in Kerala floods.


Share :

Related Posts