முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிக் பாஸ் தமிழ் 2: மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா: களேபரமான பிக் பாஸ் ஹவுஸ்!

Tags : BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 2, ISHWARYA, OVIYA, Category : TAMIL NEWS,

சென்னை: நல்லது பண்ணா சொல்ல மாட்ட, தப்பு பண்ணா  உடனே சொல்லுவன்னு ஜனனி மற்றும் மஹத்தை  ஐஸ்வர்யா திட்டுவது போல புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்துக்கான  டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ மற்றும் ஆரஞ்சு டீமாக பிரிந்துள்ளனர்.

இதனால்  இந்த டாஸ்க் துவங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்.  இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியான முதல் புரொமோவில் ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து சென்றாயன்  இழுக்க  இதனால் கடுப்பான ஐஸ்வர்யா பிசிக்கல் வைலன்ஸ் பண்ணீட்டிங்கல இனிமே பாருங்க என்று கத்தி கொண்டே  வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.   இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2வது  புரொமோ  வெளியாகியுள்ளது. அதில், ஆரஞ்சு  டீமில் இருக்கும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் ப்ளூ டீமின் ஒரு பொருளை எடுத்து கொண்டு ஓடுகிறார்கள். இதனால் வெறுப்பான ஜனனி மோமோ நம்ம கிட்ட இருந்து எடுத்துட்டாங்கன்னு கத்த, உடனே ஐஸ்வர்யா நீங்க வாங்க, வாங்க தனியா என்று ஜனனியை கூப்பிடுகிறார்.  

நல்லது பண்ணா சொல்ல மாட்ட, தப்பு பண்ணா  உடனே சொல்லுவன்னு ஜனனி,மஹத்தை  ஐஸ்வர்யா டார்கெட் பண்ண, அப்போ தெரியலையா தப்பு, தப்பு தெரியலையா அப்போ என்று யாஷிகா விஸ்வரூபம் எடுக்கிறார்.  இம்முறை வெளியான புரொமோவில் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் ஜனனியையும், மஹத்தையும் டார்கெட் வைத்து செயல்படுகின்றனர். அதனால் ஐஸ்வர்யா இன்று கண்டிப்பாக தன்  ருத்ரதாண்டவத்தை  ஆடுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share :

பொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்?
ரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு
விஸ்வாசம் படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு

Related Posts