இங்கிலாந்துக்கு பதிலடி: 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய
அணி வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் உள்ள
டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக
நிர்ணயிக்கப்பட்டது. India win the 3rd Test by 203 runs. #ENGvIND pic. twitter. com/YkNJjsGRlQ— BCCI (@BCCI) August 22, 2018

நேற்றைய 4-ஆம் நாள் ஆட்டத்தில்
இங்கிலாந்து அணி இலக்கை சேஸ் செய்ய முயற்சித்தது. ஆனால், அந்த அணியின் முதல் 4 விக்கெட்டுகள் மள, மளவென
சரிந்தது. இதனால் அந்த அணி 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு
விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த
ஜோடி 169 ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பும்ரா பிரித்தார். அணியின் ஸ்கோர் 231-ஆக இருக்கும்போது ஜாஸ்
பட்லர் 106 ரன்களில் அவுட்டானார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும்
இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரியத் தொடங்கியது. பும்ரா
அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில்,
இன்று 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அஷ்வின் இங்கிலாந்து அணியின் கடைசி
விக்கெட்டை சாய்த்து வெற்றியை உறுதி செய்தார். Player of the Match goes to #TeamIndia Skipper @imVkohli. #ENGvIND pic. twitter. com/4MTJj87MmY— BCCI (@BCCI) August 22, 2018

இதன்மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. இருப்பினும் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன்
மூலம் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற்ற 6-வது இந்திய கேப்டன் என்ற
சிறப்பை விராட் கோலி பெற்றுள்ளார். அத்துடன் அவரே இந்த போட்டியின் ஆட்டநாயகனகவும் தேர்வு
செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ஆம் தேதி சவுதாம்டனில்
நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *