நடிகர் விஜய் கேரளாவுக்கு எவ்வித நிதியுதவி அளிக்காதது ஏன்?! 

கேரளாவில் கடந்த 100  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது.  பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது.கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன.  கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 66 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன. சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது. பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் கன மழையால் 106 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ஆம் தேதியில் இருந்து இதுவரை மழை மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இன்று, கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், விஜய்சேதுபதி 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய், இதுவரை எவ்வித நிதியுதவி அளிக்காதது அனைவரது ரசிகர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் எப்போதும் போல சில நாட்கள் கழித்தே உதவி வழங்குவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *