முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கேரள மக்களுக்கு, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் நிவாரணம் அறிவிப்பு!

Tags : Category : TAMIL NEWS,

கேரளாவில் கடந்த 2  மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .மேலும் விடாத  கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.  இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் வீடு, வாசல்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகைக்கு, தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளனர்.மேலும், நடிகர் தனுஷ் ரூ. 15 லட்சமும், நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். நடிகர்களில் அதிகமான தொகை ரூ. 01 கோடியை நடிகர் பிரபாஸ் வழங்கியுள்ளனர். 


Share :