ஒரு படத்துக்காக, பல படங்களை உதறி தள்ளிய அமலாபால்!

அமலாபால் திருமணமாகி விவாகரத்து வாங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அவர் குடும்பப் பாங்காக நடித்து சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை.சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், அந்த படத்துக்காக சில காலம் படங்கள் வெளியிடாமல் இருந்தார். தற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில்,  நல்ல வரவேற்பை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். அவர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இதில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நல்ல கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவிர்க்க கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து வருகிறார்.கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அனைத்து நடிகைகளும் விரும்புகின்றனர். சமீப காலங்களாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்கி வருகினர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *