அஜித்தின் அடுத்த படத்தை பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யா? ரசிகர்கள் தலையில் விழுந்த பேரிடி

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகுமாம்.

இந்நிலையில் அஜித் அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். அடுத்ததாக இவரை தீரன் புகழ் வினோத் தான் இயக்கவுள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பையும், ஏ. ஆர். ரகுமான் இசையையும் கவனிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி தானாம், உண்மையில்லையாம். அஜித் விஸ்வாசம் படத்தில் மட்டுமே முழு கவனத்துடன் உள்ளார். இன்னும் அவரது அடுத்த படத்திற்கான வேலையில் அவர் இறங்கவில்லை என அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதனால் இதுவரை மனதில் கோட்டை கட்டி வந்த ரசிகர்கள் தலையில் பேரிடி விழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*