ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 இலட்சம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

18–வது ஆசிய விளையாட்டு போட்டி ஆகஸ்டு 18 அன்று இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில்  கோலாகலமாக தொடங்கியது.  இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10000 க்கும் மேற்பட்ட வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.  வரும் செப்டம்பர் 2–ந் தேதியோடு போட்டிகள் அனைத்தும் நிறைவுபெறுகிறது.இந்நிலையில்,  ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*