மகளிருக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் திவ்யா கக்ரன் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.  

18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்த மாதம் ஆகஸ்டு 18 அன்று இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில்  கோலாகலமாக தொடங்கியது.  இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10000 க்கும் மேற்பட்ட வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். வரும் செப்டம்பர் 2–ந் தேதியோடு போட்டிகள் அனைத்தும் நிறைவுபெறுகிறது.  இந்நிலையில்,  மகளிருக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் திவ்யா கக்ரன் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.  ஆசிய விளையாட்டு போட்டியின், பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்  என 10 பதக்கங்களுடன் இந்திய அணி 7-ம் இடத்தில் உள்ளது.  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*