முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத், நாடு முழுவதும் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags : Category : TAMIL NEWS,

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத், நாடு முழுவதும் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் மசூதிகளிலும், பொது இடங்களிலும், சிறப்பு தொழுகைகள் நடைப்பெற்று வருகின்றன.இந்த நாளில், ஏழைகளும் இறைச்சி உணவு சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதி, இஸ்லாம் இன மக்கள் இறைச்சி தானம் செய்வது வழக்கம்.தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித்என்ற உருது மொழி வழக்கில்  அழைக்கப்படுகின்றது.ஆடு, மாடுகளை பலி கொடுத்து, மூன்றாக பிரித்து, ஒன்றை, தம் குடும்பத்திற்கும், இரண்டாம் பகுதியை உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதியை, ஏழைகளுக்கு தானம் கொடுப்பர்.  இது இஸ்லாமியர்களின் வழக்கப்படி குர்பானி எனப்படுகிறது.இதற்கு தமிழகத்தை பொறுத்த வரையில் ஆடுகள் மட்டுமே அதிக அளவில் பலி கொடுக்கப்படும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இது குறித்த நகைச்சுவை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.ஒரு ஆடு தப்பித்து, மரத்தின் உச்சியில் தவிப்பதை, பலியிடுவதோடு தொடர்புபடுத்தி இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 


Share :