தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் - சிறு குறிப்பு

By Admin - August 2nd, 2018

Tags : ADMK, AKBose, Category : Tamil News,

சென்னை,மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர், ஏ.கே.போஸ்.எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கும் இவர் 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார்.

மதுரையில் ஜீவா நகரில் வசித்து வரும் ஏ.கே. போஸ் டிராவல்ஸ் அதிபர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது.69 வயதாகும் ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித்தலைவி ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தார். 

2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானர். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார் கூடவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் துண்டு போட்டார் ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. 

இந்த நிலையில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர், ஏ.கே.போஸ். என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

அதிமுக வேட்பாளர் பட்டியல் செல்லாது? – கே. சி. பழனிசாமி!

ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்ட கையெழுத்துக்கு எதிராக முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முக்கியத் தீர்ப்பு…

முதலமைச்சர் சந்தித்த தேமுதிக வேட்பாளர்கள்!

தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ், திருச்சியில் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் நேற்று முதலமைச்சர்…

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வராத ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் – மீண்டும் புகைச்சலா?

பெரியகுளம்:ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் துணை முதல்வராக தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து…

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு!

தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்டவழக்கில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த பாட்டியாலா நீதிமன்றம் வருகின்ற 17ம்…

தமிழிசையை சந்தித்து ஆசி பெற்ற தேமுதிக வேட்பாளர்கள்

தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். @DrTamilisaiBJP @BJP4TamilNadu…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share