முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.

Tags : Category : TAMIL NEWS,

மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும் மற்றும் ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.சென்னையில் பெய்த மழை அசாதாரணமானது இல்லை என்றாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் அசாதாரணமானவை என்பது அனைவரும் அறிந்த உண்மை.சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.பல வீட்டு வசதித் திட்டங்கள் ஏரிகளில் தான் அரசால் செயல்படுத்தப்பட்டன. ஏரி நிலங்களில் வீடுகளை கட்டுவதற்கான பல தனியார் திட்டங்களுக்கு சதுர அடி கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்தது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு கட்சிகளின் அரசுகள் தான்.அதனால், அடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியதும், மழையிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் அவர்கள் தானே தவிர அப்பாவி மக்கள் அல்ல.வெள்ளம் புகட்டிய பாடத்திற்கு பின்னரும் இன்னும் அதே நிலை தான் தொடர்கிறது. காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்பினால் ஒரு பகுதி முழுமையும் காலி செய்யும் அளவிற்கு ஆற்றை ஆக்கிரமித்து குடியுருப்புகளை கட்டியுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி, அதன் தீவிரத்தை உணர்த்தும்.


Share :