மனிதநேயம் அழியவில்லை, பிஞ்சு உள்ளம் கொண்ட சிறுவர்களின் செயலால் குவியும் பாராட்டுக்கள்.!

கேரளாவில் டேபிள் வாங்க தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்காக சிறுவர்கள் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் விழுப்புரத்தை சேர்ந்த அனுப்ரியா என்ற சிறுமி தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கினார்.இதேபோன்று கேரள மாநிலத்தில் கொச்சி பகுதியை சேர்ந்த சித்திக் மல்லாசரி மற்றும் பாத்திமா என்ற தம்பதிகளின் குழந்தைகளான ஹாரன் மற்றும் தியா ஆகிய சகோதர சகோதரிகள் தாங்கள் படிப்பதற்காக டேபிள் வாங்க உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்து வந்தனர். இந்நிலையில் கேரளமக்களின் சிரமத்தை பார்த்த அவர்கள்   தாங்கள் சேர்த்து வைத்துள்ள ரூ.2210  மொத்த பணத்தையும்  கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்து கொடுத்துவிட்டனர்.இந்த தொகை சிறிய தொகையாக இருந்தாலும் தங்களை மகிழ்ச்சியை பெரிதாக எடுக்காத அந்த  இரண்டு குழந்தைகளின் உள்ளம் பல கோடிகளுக்கும் ஈடாகாது எனவும்,உலகில் இன்னும் மனிதத்தன்மை உயிருடன் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இருக்கவே முடியாது எனவும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *